Hotstar யூசர்களுக்கு புது ரூல்.. ரூ.664 செலுத்தணும்.. மார்ச் முதல் அமல்?.. Disney Plus Hotstar New Rules Follow After March 2024

Hotstar யூசர்களுக்கு புது ரூல்.. ரூ.664 செலுத்தணும்.. மார்ச் முதல் அமல்?..

Disney Plus Hotstar New Rules Follow After March 2024

Disney Plus Hotstar New Rules Follow After March 2024 Hotstar யூசர்களுக்கு புது ரூல்.. ரூ.664 செலுத்தணும்.. மார்ச் முதல் அமல்?.. புதிய சிம் கார்டு விதிகள், புதிய ஐடி விதிகள் தொடங்கி.. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பேடிஎம் சேவைகளுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் வரையிலாக.. இந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து “சலித்து போகும் அளவிற்கு” புதுப்புது விதிகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Disney Plus Hotstar New Rules Follow After March 2024
Disney Plus Hotstar New Rules Follow After March 2024

இதற்கிடையில் பிரபல ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) நிறுவனம், தன் பங்கிற்கு ஒரு புதிய விதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அதென்ன விதி? அந்த விதியை பின்பற்றாவிட்டால் ஹாட்ஸ்டார் பயனர்கள் என்ன சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? ஹாட்ஸ்டாரின் இந்த புதிய விதி எப்போது முதல் அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:

மற்றொரு பிரபலமான ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், பாஸ்வேர்ட் ஷேரிங்கிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை கடந்த ஆண்டு தொடங்கியது. இதன்கீழ் தன் பயனர்கள் தங்கள் நண்பர்களுடனோ அல்லது அவர்களது வீட்டிற்கு வெளியே உள்ள எவரிடமோ பாஸ்வேர்ட்களை பகிர்ந்து கொள்வதை கட்டுப்படுத்த தொடங்கியது.

Disney Plus Hotstar New Rules Follow After March 2024

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சி வருவாயை அதிகரிக்கவும், பயனர் பதிவுகளை அதிகரிக்கவும் உதவியது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும் நெட்பிளிக்ஸின் அடிச்சுவடுகளை பின்பற்றி, சந்தா செலுத்தும் பயனர்கள், சந்தா செலுத்தாத பயனர்களிடம் பாஸ்வேர்ட் ஷேரிங் செய்வதை தடுக்க உள்ளது.

இதுகுறித்து பேசிய டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரியான ஹக் ஜான்ஸ்டன், பல டிஸ்னி பிளஸ் அக்கவுண்ட்கள் ஆனது “முறையற்ற பகிர்வு” (Improper Sharing) என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே வருகிற மார்ச் 2024 முதல், பயனர்கள் தத்தம் பாஸ்வேர்ட்களை பகிர்வதை கட்டுப்படுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படலாம். இதன்கீழ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருக்கும் ஒரு நபர், தனது வீட்டிற்கு வெளியே வசிப்பவர்களை தனது அக்கவுண்டில் சேர்க்க விரும்பினால் அதற்கு கூடுதலாக கட்டணம் (Extra Charges) செலுத்த வேண்டி இருக்கும்.

Disney Plus Hotstar New Rules Follow After March 2024

அதாவது பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடுக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் என்ன செய்கிறதோ, அதையே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் செய்ய உள்ளது. நினைவூட்டும் வீட்டிற்கு வெளியே வசிக்கும் ஒருவரை சேர்ப்பதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது மாதத்திற்கு $7.99 வசூலிக்கிறது; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.664 வசூலிக்கிறது. இந்த அம்சம் எல்லா பிராந்தியங்களிலும் அறிமுகமாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் பாஸ்வேர்ட் ஷேரிங்கை கட்டுப்படுத்த தொடங்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அது அவர்களின் வருவாயை கணிசமாக பாதிக்கிறது. இந்த நிறுவனங்கள், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போலவே, லாபம் பார்க்க கடுமையாக போராடி வருகின்றன; அதற்கு பாஸ்வேர்ட் ஷேரிங் ஆனது ஒரு முக்கியமான காரணமாகும். பாஸ்வேர்ட் ஷேரிங் ஆனது பணம் செலுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும். இது நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் வருமானத்தை பாதிக்கிறது. ஆக பாஸ்வேர்ட் ஷேரிங் செய்யும பணம் செலுத்தும் சந்தாதார்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், இந்நிறுவனங்கள் தத்தம் வருவாயை கணிசமாக அதிகரிக்க முடியும்.

Leave a Comment

error: Content is protected !!