ஜனவரி 22 தமிழகத்திற்கு பொது விடுமுறை பற்றி புதிய தகவல் 22nd January public holiday for Tamil Nadu News

ஜனவரி 22 தமிழகத்திற்கு பொது விடுமுறை பற்றி புதிய தகவல்

22nd January public holiday for Tamil Nadu News

22nd January public holiday for Tamil Nadu News ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இந்த கோரிக்கையானது புதிய நீதி கட்சி சார்பாக தமிழக அரசை டாக்டர் ஏசி சண்முகம் நிறுவன தலைவராக இருக்கின்ற புதிய நீதி கட்சியின் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .எனவே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
22nd January public holiday for Tamil Nadu News
22nd January public holiday for Tamil Nadu News

 
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் அறிக்கை.

பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் பெருமுயற்சியில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி அன்று பகவான் ஸ்ரீ ராமரின் புண்ணிய தலமான அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

22nd January public holiday for Tamil Nadu News

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நம் அண்டை மாநிலமான புதுச்சேரி உட்படப் பிற மாநிலங்களும் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

ஆன்மீக பக்தர்கள் நிறைந்து வாழும் நம் தமிழகத்திலும் நம் மக்களின் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சிகளில் காண வசதியாக வருகிற ஜனவரி 22ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என புதிய நீதிக்கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

22nd January public holiday for Tamil Nadu News

Leave a Comment

error: Content is protected !!