தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவு!!.. TN Govt Banned Cotton Candy Sales Feb17

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து

அரசு உத்தரவு!!..

TN Govt Banned Cotton Candy Sales Feb17

 TN Govt Banned Cotton Candy Sales Feb17 தமிழக முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது பஞ்சுமிட்டாயின் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Govt Banned Cotton Candy Sales Feb17
TN Govt Banned Cotton Candy Sales Feb17

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

முன்னதாக ,பஞ்சுமிட்டாய்களின் நச்சுப்பொருள் இருப்பதை கண்டுபிடித்த புதுச்சேரி அரசு அதற்கு தடை விதித்தது மேலும் தமிழகத்திலும் ஆய்வு செய்ய அறிவுறுத்தியது.தமிழகத்தில் பஞ்சாய் மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால். தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது.

செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!