தமிழக பத்திர பதிவுத்துறையில் அதிரடி மாற்றம் அரசு அறிவிப்பு!! Tamilnadu Registration Department New Rules Follow News tamil

தமிழக பத்திர பதிவுத்துறையில் அதிரடி மாற்றம் அரசு அறிவிப்பு!!

Tamilnadu Registration Department New Rules Follow News tamil

Tamilnadu Registration Department New Rules Follow News tamil தமிழக அரசின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான பத்திரப்பதிவுத்துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே பத்திரப்பதிவு செய்து வந்திருந்த நிலைமையை மாற்றி நாள் முழுவதும் பத்திரப்பதிவுக்காக காத்திருந்து எப்போது பதிவு செய்யப்படும் என்ற நிலையை மாற்றி டோக்கன் முறையை தமிழக அரசு ஆனது அறிவித்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamilnadu Registration Department New Rules Follow News tamil
Tamilnadu Registration Department New Rules Follow News tamil

அந்த டோக்கன் முறையில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை கண்டறிந்து எந்த டோக்கன் அந்த குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் அழைக்க வேண்டும் என தானியங்கி எந்திரத்தின் மூலம் டோக்கன் நம்பர் தெரிவிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது .இது பொது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பத்திரப்பதிவு துறையில் இருந்து வரும் தேக்க நிலையை குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகம்:

தமிழகத்தின் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த வரிசையின் படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரிசைப்படுத்துதல் முறையில் குழப்பங்கள் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவு துறை தெரிவித்திருந்தது.

Tamilnadu Registration Department New Rules Follow News tamil

புதிய நடைமுறையின் படி பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண், விண்ணப்பதாரர் பெயர் போன்ற விவரங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தும் வகையில் பெரிய திரை வசதி 3.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. டோக்கன் எண் தெரிவிக்கப்படும்போது குரல் வழி அறிவிப்பும் ஒலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் சென்னை டி நகர் பதிவு அலுவலகத்தில் நேற்று இந்த புதிய வசதியை தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பேசும்போது, நடப்பு மாதம் பிப்ரவரி வரையில் பத்திரப்பதிவு துறை மூலமாக ரூபாய் 1812.70 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!