பேருந்தில் பயணிக்க இனி காசு இல்லை? கார்டு தான்!
போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
New Plan For TN Bus QR Code Facility
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
New Plan For TN Bus QR Code Facility தமிழக அரசனது அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக பல்வேறு வகையான அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் வழங்குவதில் மட்டுமல்லாமல் பல்வேறு புதிய திட்டங்கள் தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்றவாறு அதனை பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அளிக்கும் முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது அந்த வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பமானது தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து துறைகளிலும் முக்கிய ஆதிக்கத்தை தற்போது பார்க்கலாம் .அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஆனது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திலும் டிஜிட்டல் சேவையை செய்ய தயார் நிலையில் உள்ளது .
பேருந்தில் உள்ள நடத்துனர் மற்றும் பயணிகளுக்கு இடையே சமூகமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் UPI ,QR கோடு மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது இந்த திட்டத்தை பற்றி முழுமையாக நாம் இப்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக பெரு நகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து டிக்கெட்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி பேருந்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளும்படியான திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பொதுவாக பேருந்துகளில் சில்லறை வாங்கும் போது நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்து நடத்துனர்களிடம் UPI மற்றும் கார்டு மூலமாக பணம் செலுத்தும் புதிய கையடக்க கருவி வழங்கப்பட்டிருக்கிறது.
டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இந்த கருவியை பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் ஏறும் பேருந்து நிறுத்தம் மற்றும் அவர்கள் இறங்கும் இடம் ஆகிவற்றை தேர்வு செய்யும்போது அதற்கான கட்டணம் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். அதன் பின்னர், பயணிகள் ஸ்கேன் செய்து டிக்கெடுகளை பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளிலும் க்யூ ஆர் கோடு மூலமாகவே பேருந்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளும் படியான திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.