TNPSC குரூப் தேர்வுகளில் கல்வித் தகுதி மாற்றம் ! புதிய தகவல் TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info

TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info

TNPSC குரூப் 4 தேர்வு கல்வித் தகுதி மாற்றம்

TNPSC குரூப் 4 தேர்வு கல்வித் தகுதி மாற்றம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழகத்தில் உள்ள அரசு அலுவலர்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் தேர்வுகளை தேர்வு செய்து அந்த குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நிரப்பும் பணியினை டிஎன்பிஎஸ்சி ஆனது செய்து வருகின்றது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info
TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே குரூப் 4 தேர்வு தான் தமிழகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வுகள் பங்குபெறும் மிகப்பெரிய தேர்வாக நடத்தப்பட்டு வருகின்றது இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என இதுவரை உள்ளது ஆனால் இதில் அதிகபட்ச கல்வி தகுதியாக எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனவே குறைந்த வகுப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே எந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நிலை இதுவரை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது அதன் முழு விவரங்களை நாம் பார்க்கலாம்.

அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு தோல்வி பெற்றவர்கள் கலந்து கொள்ளும் இத்தேர்வில் திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் பணிநியமனம் வழங்கப்பட்டு வேலை செய்து வரும் நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்பதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சதீஷ்குமாருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் “10ஆம் வகுப்பு தேர்ச்சியை அதிகபட்ச கல்வித்தகுதியாக கருத முடியாது. அதிக வயதுடையவர்களை பணியில் நியமிப்பதே சட்டவிரோதமாகும்.” என நீதிபதிகள் கூறியுள்ளனர். அதேபோல் “தமிழக அரசின் குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பில் குறைந்த மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும்.” எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகப் புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்புகள் மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நம்புகிறேன், என தனது தீர்ப்பில் கூறினார்.

TNPSC Group 4 Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது.

TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info
TNPSC Group 4 Exam Education Qualification 2024 New info

TNPSC குரூப் 4 தேர்வு கல்வித் தகுதி

இந்த குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் அதிகபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. அதாவது 10 வகுப்பு தேர்ச்சி முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குரூப் 4 தேர்வை எழுதலாம்.

TNPSC Webslite Link

ஆதார் முக்கிய அறிவிப்பு

Leave a Comment

error: Content is protected !!