ரூ.30,000 சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு!! இந்த ஆஃபர் குறிப்பிட்ட நாள் மட்டுமே!! Joy E Bike Super Offer Bike Launch Now

ரூ.30,000 சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு!! இந்த ஆஃபர் குறிப்பிட்ட நாள் மட்டுமே!!

Joy E Bike Super Offer Bike Launch Now

Joy E Bike Super Offer Bike Launch Now ரூ.30,000 சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு!! ஜாய் இ-பைக் (Joy e-bike) நிறுவனம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், தற்சமயம் சந்தையில் விற்பனையில் இருக்கும் ஜாய் இ-பைக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் 2-வீலர்களையும் இனி பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

2016ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி லிமிடெட் என்கிற நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன மார்க்கெட்டிங் பிராண்டாக ஜாய் இ-பைக் விளங்குகிறது. அதாவது, வார்ட்விசார்ட் நிறுவனம் உற்பத்தி செய்யும் எலக்ட்ரிக் 2-வீலர்கள் அனைத்தும் ஜாய் இ-பைக் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் கடந்த நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று ஜாய் இ-பைக் ஆகும். இந்த நிலையில், 2-வீலர்கள் விற்பனையில் ஜாய் இ-பைக் நிறுவனம் வெற்றிக்கரமாக 1 லட்சம் மைல்கல்லை கடந்துள்ளது. அதாவது, ஜாய் இ-பைக் நிறுவனத்தால் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

Joy E Bike Super Offer Bike Launch Now

ஜாய் இ-பைக் நிறுவனத்தின் 1 லட்சமாவது வாகனமாக மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. ஜாய் இ-பைக் நிறுவனத்துக்கு குஜராத்தின் வதோதாராவில் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான், 1 லட்சம் எலக்ட்ரிக் 2-வீலர்களை உருவாக்கி ஜாய் இ-பைக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஜாய் இ-பைக் பிராண்டில் ஆரம்பத்தில் எலக்ட்ரிக் பை-சைக்கிள்களை மட்டுமே வார்ட்விசார்ட் நிறுவனம் விற்பனை செய்தது.

அதன்பின், குறைவான வேகத்தில் செல்லக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க ஆரம்பித்த ஜாய் இ-பைக் நிறுவனம், 2018இல் பட்டர்ஃப்ளை (பட்டாம்பூச்சி) என்ற பெயரில் தனது முதல் லோ-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்சமயம் 10க்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனையில் உள்ளன. இந்த 10 மாடல்களில் குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடங்கியுள்ளன. கிட்டத்தட்ட கடந்த 6 வருடங்களுக்கு மேல் வாகன விற்பனையில் ஈடுப்பட்டுவரும் வார்ட்விசார்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் மட்டும் தற்சமயம் 750க்கும் அதிகமான கஸ்டமர் சேவை மையங்கள் உள்ளன.

Joy E Bike Super Offer Bike Launch Now
1 லட்ச வாகனங்கள் விற்பனையை கொண்டாடும் விதமாக ஜாய் இ-பைக் நிறுவனம் அதன் 2-வீலர்களுக்கு ரூ.30,000 வரையில் கவர்ச்சிக்கரமான சலுகைகளையும், இலவச இன்ஸ்சூரன்ஸையும் அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31ஆம் தேதி வரையில் ஜாய் இ-பைக் நிறுவனத்தின் மிஹோஸ், வூல்ஃப்+ மற்றும் ஜென்ரேஷன் நெக்ஸ்ட் நானு+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்த சலுகைகளை பெறலாம். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 2024 பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இந்த கண்காட்சியில் ஜாய் இ-பைக் நிறுவனத்தின் முதல் ஹைட்ரஜன் பவர் எலக்ட்ரிக் 2-வீலர் காட்சிக்கு நிறுத்தப்பட்டது. அத்துடன், விற்பனையில் உள்ள தனது அனைத்து 2-வீலர்களையும் வார்ட்விசார்ட் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக நிச்சயமாக வார்ட்விசார்ட்டை சொல்லலாம். அத்தகைய நிறுவனம் விற்பனையில் இப்போதுதான் 1 லட்சத்தை கடந்திருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், 6 வருடங்களில் 1 லட்ச 2-வீலர்கள் விற்பனை என்பது சற்று குறைவே ஆகும். ஜாய் இ-ரெக் என்ற பிராண்டில் எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களையும் வார்ட்விசார்ட் நிறுவனம் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!