குடும்ப தலைவிகளுக்கு இலவச சிலிண்டர் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? PMUY Free Cylinder Apply Online

குடும்ப தலைவிகளுக்கு இலவச சிலிண்டர் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

PMUY Free Cylinder Apply Online

PMUY Free Cylinder Apply Online ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கேஸ் கனெக்சன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான இலவச எரிவாயு சிலிண்டர் ஆனது ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
PMUY Free Cylinder Apply Online
PMUY Free Cylinder Apply Online

தற்போது அந்த இலவச எரிவாயு சிலிண்டர் ஆனது மீண்டும் கொடுக்க மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது .இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த உஜ்வாலா சிலிண்டர் நீங்கள் வாங்கினால் உங்களுக்கான சிலிண்டர் மானியம் ரூபாய் 300 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத் தகுந்த அம்சம் ஆகும் அந்த சிலிண்டர் பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதுவரையிலும் 5 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

PMUY Free Cylinder Apply Online

தொடர்ந்து கூடுதலான பயனாளிகளை இணைக்கும் வகையில், தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இலவச சிலிண்டர் இணைப்பு

இதனால் சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்கள் , தங்களது ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், முகவரி ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜன் தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, https://www.pmuy.gov.in/ujjwala2.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது இத்திட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.

Leave a Comment

error: Content is protected !!