அட்டகாசமான தகவல்!!.. Google சூப்பர் AI அப்டேட் வந்தாச்சு!! Google Lumiere New AI Update 2024

அட்டகாசமான தகவல்!!.. Google சூப்பர் AI அப்டேட் வந்தாச்சு!!

Google Lumiere New AI Update 2024

Google Lumiere New AI Update 2024 AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. போட்டி போட்டு கொண்டு பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்கின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

அந்த வகையில் AI தொழில்நுட்பத்தில் நான் ராஜா என மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்துள்ளது கூகுள்.

Google Lumiere New AI Update 2024
Google Lumiere New AI Update 2024

கூகுளின் AI பயணம்: 2001ஆம் ஆண்டிலேயே மெஷின் லேர்னிங் முறையை கூகுள் தனது கூகுள் தேடலில் ஒருங்கிணைத்தது. இதன் மூலம் நாம் வார்த்தைப்பிழையுடன் உள்ளீடு செய்தால் கூட கூகுள் தானாகவே சரி செய்து உரிய பதில்களை நமக்கு தேடி தந்தது.

அதன் பின் 2006இல் கூகுள் டிரான்ஸ்லேட் அறிமுகம் செய்யப்பட்டது. வார்த்தைகளையும் வாக்கியங்களையும் நமக்கு தெரிந்த மொழியில் உள்ளீடு செய்து தேவையான மொழியில் மாற்றி நாம் தேட முடியும்.
இது கூகுள் தேடலை அனைவரும் எளிதாக பயன்படுத்த உதவியது. தொடர்ந்து இதனை கூகுள் மேம்படுத்தி வருகிறது.
CHATGPT VS BARD: செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் மிகப்பெரிய அறிவிப்பாக கடந்த 2022இல் OpenAI நிறுவனம் ChatGPT ஐ அறிமுகம் செய்தது. செயற்கை நுண்ணறிவு துறையையே இது ஒரு கலக்கு கலக்கியது.
சாட்பாட் முறையில் நாம் கேட்கும் அனைத்திற்கும் தன்னிடம் உள்ள தகவல்களை கொண்டு இது பதில் தரும். இதை தூக்கி சாப்பிடும் வகையில் 2023இல் கூகுள் நிறுவனம் Bard-ஐ அறிமுகம் செய்தது. இது ஒரு chatbot .
Google Lumiere New AI Update 2024
மெஷின் லேர்னிங் மற்றும் லேங்குவேஜ் பிராசசிங்கில் செயல்படுகிறது. இதனை இணையதளங்கள், தகவல் பரிமாற்றம் தளங்கள் – பயனாளர்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதில் தர கூடிய தளங்களில் எல்லாம் ஒருங்கிணைக்க முடியும்.
கடிதம் எழுதும் மின்னஞ்சல் கொடுக்கும், மொழி மாற்றம் செய்யும், நீங்கள் என்ன கேட்டாலும் விடை தரும். இதனை இன்னும் மேம்படுத்தி 2023 டிசம்பரில் கூகுள் ஜெமினி மாடலை அறிமுகம் செய்தது. மல்டிமாடல் லேங்குவேஜ் மாடலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஜெமினி BARD சாட் பாட்-க்கு அதீத திறனை வழங்கும் வகையில் உள்ளது.
டெக்ஸ்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை அடையாளம் காணும் அம்சத்தை கொண்டுள்ளது . ப்ராப்ளம் சால்விங் திறனில் ஜெமினி அட்வான்ஸ்டு நிலையில் உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
Google Lumiere New AI Update 2024
வீடியோவை உருவாக்கும் AI: கூகுள் நிறுவனம் எளிதாக வீடியோக்களை உருவாக்க உதவும் Lumiere எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது SPACE-Time-U-Net (STU-Net) என்ற மாடலில் செயல்படுகிறது.
நீங்கள் எந்த மாதிரியான வீடியோ என உள்ளீடு செய்தால் போதும் உடனே வீடியோ தயாரித்து கொடுத்துவிடும். வார்த்தைகளில் இருந்து வீடியோ உருவாக்கும், புகைப்படங்களில் இருந்து வீடியோ உருவாக்கும் என இது பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு படம் கொடுத்து இதை போல படங்களை கொண்ட வீடியோ வேண்டும் என்றாலும் அது உருவாக்கி தரும்.

Leave a Comment

error: Content is protected !!