மகிழ்ச்சி EPFO பணம் இனி விரைவில் கிடைக்கும் விதிகளில் மாற்றம் EPF New Update 2024 EPFO withdrawal money get soon Change in rules

EPF New Update 2024

EPF New Update 2024 : மகிழ்ச்சி EPFO பணம் இனி விரைவில் கிடைக்கும் விதிகளில் மாற்றம் EPF New Update 2024 EPFO withdrawal money get soon Change in rules 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

EPFO திரும்பப் பெறும் பணம் விரைவில் கிடைக்கும் விதிகளில் மாற்றம்

நீங்கள் பிஎஃப் சந்தாதாரரா? நீங்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவரா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதிய விதிகளின் படி, ரூ.1 லட்சம் வரை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். இதன் பொருள் என்னவென்றால் இப்போது உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து (PF Account) முன்பணம் எடுப்பது எளிதாகிவிட்டது. 

முன்னர், 1 லட்சம் ரூபாய் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கும்போது பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வித செயல்பாடுகளையும் முடித்த பின்னர் சுமார் 1 மாத காலம் கழித்து பணம் உங்கள் கணக்கில் பணம் கிரெடிட் செய்யப்படும். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது.

EPF New Update 2024
EPF New Update 2024

3 நாட்களில் பணம் கணக்கில் வந்துவிடும்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இன் படி, ஒருவர் மருத்துவ செலவுகளுக்கான முன்பணம் (Medical Advance) கோரினால், வெறும் 3 வேலை நாட்களில் பணம் அவரது கணக்கில் வந்து சேரும். இதற்கு பிஎஃப் உறுப்பினர்கள் (PF Members) பிஎஃப் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவ்சியமும் இல்லை. எனினும், இதற்கு சந்தாதாரர்கள் சில முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

பின்பற்ற வேண்டிய விதிகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் நீங்கள் சான்று சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், அட்வன்ஸ் க்ளெய்மில் சில நேரங்களில் பணம் நேரடியாக மருத்துவமனை கணக்கிலும் டெபாசிட் செய்யலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணம் சந்தாதாரர்களின் கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும், 1 லட்சத்துக்கும் குறைவாக பணம் எடுத்தால் எதுவும் செய்ய வேண்டியதில்லை. எந்த தொந்தரவும் இல்லாமல் பணம் கணக்கில் கிரெடி ஆகிவிடும்.

அவசர பணத் தேவையின் போது

சில சமயங்களில், நாம் சில தீவிர நோய்களால் ஆட்கொள்ளப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது ஆவண செயல்முறைகளை செய்து முடிக்க நமக்கு நேரம் கிடைக்காது. இந்த நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ள இபிஎஃப்ஓ, அட்வான்ஸ் மெடிக்கல் க்ளெய்மைத் (Advance Medical Claim) தொடங்கியது. இதை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த வசதியில் புதிய விதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்போது கடுமையான நோய் ஏற்பட்டால், விண்ணப்பித்த மூன்றாவது நாளில் சந்தாதாரர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கும் விதி வந்துள்ளது. ஒரு வேளை இப்படிப்பட்ட அவசர தேவைகளின் போது, பணத்தை பெற தாமதம் ஏற்பட்டால், அதைப் பற்றியும் புகார் அளிக்கலாம். இருப்பினும், இதற்கும் EPFO ​​சில முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நோயாளியை அரசு/பொதுத்துறை செக்டர் யூனிட்/CGHS பேனல் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என்பது.

அலுவலக பணிகளில் இருக்கும் பணியாளர்களுக்கு (Employees) இபிஎஃப்ஓ பிஎஃப் தொகை மட்டுமல்லாமல் இன்னும் பல வசதிகளை வழங்குகிறது. இவற்றை பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். அப்போதுதான் தேவையான நேரத்தில் நமக்கு இருக்கும் வசதியை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

EPF New Update 2024
EPF New Update 2024

EPFO Website

Leave a Comment

error: Content is protected !!